sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீரை பார்த்து, பார்த்து பயன்படுத்துங்க! அணைகளில் இருப்பு குறைந்ததால் கலெக்டர் வேண்டுகோள்

/

குடிநீரை பார்த்து, பார்த்து பயன்படுத்துங்க! அணைகளில் இருப்பு குறைந்ததால் கலெக்டர் வேண்டுகோள்

குடிநீரை பார்த்து, பார்த்து பயன்படுத்துங்க! அணைகளில் இருப்பு குறைந்ததால் கலெக்டர் வேண்டுகோள்

குடிநீரை பார்த்து, பார்த்து பயன்படுத்துங்க! அணைகளில் இருப்பு குறைந்ததால் கலெக்டர் வேண்டுகோள்


ADDED : ஏப் 30, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சிறுவாணி மற்றும் பில்லுார் அணைகளில் நீர் இருப்பு குறைந்து விட்டதால், குடிநீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்த, கோவை கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு சிறுவாணி, பில்லுார், ஆழியார் அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து, வினியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணை


சிறுவாணி அணை பகுதியில், 2023 மார்ச், ஏப்., மாதங்களில், 57.95 மி.மீ., மழை பதிவானது; நடப்பாண்டு இவ்விரு மாதங்களிலும் மழை பொய்த்து விட்டது.

சிறுவாணியில் இருந்து நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். தற்போதுள்ள இருப்பை கருத்தில் கொண்டு, ஜூன் வரை வழங்க திட்டமிட்டு, தினமும், 3.5 கோடி லிட்டர் எடுக்கப்படுகிறது.

ஆழியார் அணை


ஆழியார் அணை பகுதியில், 2023 மார்ச்சில் 5 மி.மீ., ஏப்ரலில் 41.80 மி.மீ., மழை பதிவானது; நடப்பாண்டு மழைப்பொழிவு இல்லை. அணையில் நீர் இருப்பும் குறைவாக உள்ளது. இதைக்கொண்டு ஜூன் இறுதி வரை, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கலாம்.

பில்லுார் அணை


பில்லுார் அணை பகுதியில், 2023 மார்ச்சில் 1,130.90 மி.மீ., ஏப்ரலில் 2,189.64 மி.மீ., மழை கிடைத்தது. நடப்பாண்டு மழை பொய்த்து விட்டது.

அணையின் மொத்த கொள்ளளவு, 1,568 மில்லியன் கன அடி; தற்போது, 777 மில்லியன் கன அடியே நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான, 100 அடியில், 55.25 அடி உயரத்துக்கே நீர் இருப்பு காணப்படுகிறது.

பவானி ஆறு


பவானி ஆற்றுப்படுகை மூலம் செயல்படுத்தப்படும், 12 திட்டங்களுக்கு, தினமும், 3.9 கோடி லிட்டர் குடிநீர் தேவை. பவானி ஆற்றிலும் நீர் வரத்து குறைந்து விட்டதால், குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில், நாளொன்றுக்கு, 2.5 கோடி லிட்டரே எடுப்பதற்கு போதுமானதாக உள்ளது.

குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ஏற்கனவே அமைத்துள்ள, 2,649 போர்வெல்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்கள் மூலம், 4 கோடி லிட்டர் வரை வினியோகிக்கப்படுகிறது.

அணைகளில் இருந்து பெறப்படும் குடிநீர், பற்றாக்குறையாக இருப்பதால், குடிக்கவும் சமையலுக்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதர பயன்பாட்டுக்கு போர்வெல் தண்ணீரை உபயோகிக்க வேண்டும். நீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.

'அவசியம் என்றால் லாரி தண்ணீர் சப்ளை'

'தண்ணீர் அவசியமாக தேவைப்படும் இடங்களில், 50 போர்வெல் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதில், 29 போடப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் 24 போர்வெல்கள், பேரூராட்சி பகுதிகளில், 15 போர்வெல்கள் புதிதாக அமைக்கப்படும். போர்வெல் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க, ஐந்து சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படும்.தண்ணீர் உள்ள கிணறுகளில் இருந்து, குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகங்களுக்கு வழங்க நான்கு மோட்டார் வாங்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால் உள்ளாட்சி பகுதிகளில் லாரிகள், டேங்கர் லாரிகள் மற்றும் வாடகை லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்' என கலெக்டர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us