ADDED : ஜூலை 22, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
கோவை: விளைச்சல் குறைவு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி காரணமாக அரிசி விலை கிலோவுக்கு 7 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மாவட்ட அரிசி வியாபாரிகள் அசோசியேஷன் தலைவர் சரவணன் கூறுகையில், ‘‘கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்து இருப்பதாக கூறுவது தவறு. கடந்த மாதம் கிலோவுக்கு 5 ரூபாய் அதிகம் இருந்தது. இப்போது 7 ரூபாயாக உயர்ந்துள்ளது. 26 கிலோ சிப்பம் 1100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 1250 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சில்லரை விலையில் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. ஏற்றுமதி செய்தது போக மீதம்தான் விற்பனைக்கு வருகிறது. விலை உயர்வு இரண்டு மாதங்களில் சரியாகிவிடும்,’’ என்றார்.
