/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் 'மாடி தோட்டம் கிட்'
/
மானிய விலையில் 'மாடி தோட்டம் கிட்'
ADDED : செப் 07, 2024 02:50 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தோட்டக்கலைத்துறை சார்பில், மாடி தோட்டம் அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு 'கிட்' வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு, தோட்டக்கலைத்துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 'மாடி தோட்டம் கிட்' மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது, கிணத்துக்கடவு வட்டாரத்தில் 50 'கிட்' தயார் நிலையில் உள்ளது.
ஒரு கிட்டின் விலை, 900 ரூபாய். இதை, 50 சதவீதம் மானியத்தில், 450 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில், 6 பைகள், 2 கிலோ காயர் பித், 6 விதை பாக்கெட்டுகள், வேப்ப எண்ணெய் மருந்து, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்றவைகள் வழங்கப்படுகிறது.
ஒரு நபருக்கு, அதிகபட்சமாக, 2 'கிட்' வழங்கப்படும். இதை பெற ஆதார் நகல் மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாடி தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள நபர்கள் இத்திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனா தேவி தெரிவித்தார்.