/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரை அயிரை மீன் குழம்பு டூ ஜப்பானின் ரேமென்! 'வெல்கம்' ஆல் சாப்பாட்டு பிரியர்களே...
/
மதுரை அயிரை மீன் குழம்பு டூ ஜப்பானின் ரேமென்! 'வெல்கம்' ஆல் சாப்பாட்டு பிரியர்களே...
மதுரை அயிரை மீன் குழம்பு டூ ஜப்பானின் ரேமென்! 'வெல்கம்' ஆல் சாப்பாட்டு பிரியர்களே...
மதுரை அயிரை மீன் குழம்பு டூ ஜப்பானின் ரேமென்! 'வெல்கம்' ஆல் சாப்பாட்டு பிரியர்களே...
ADDED : ஆக 16, 2024 03:27 AM

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்--ன் சிறப்பம்சமே, எல்லா தரப்புக்குமான கண்காட்சி என்பதுதான். மனசு நிறைய ஷாப்பிங் செய்தால் மட்டும் போதுமா, வயிறு நிறைய வேண்டாமா எனக் கேட்பவர்களுக்காகவே, 20க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை விதவிதமான உணவுகள் வரிசை கட்டுகின்றன. எங்க குரூப்லயே நான்தான் சிறந்த ஃபூடி என்பவர்கள் தேடித் தேடிச் சுவைக்கலாம்.மதுரைக்காரங்க உணவைக் கொண்டாடுபவர்கள் என்பார்கள். அந்த மதுரையில் இருந்து ஆரம்பிக்கலாம்.
மதுரை பன் புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, வாழை இலை புரோட்டா, வெஜ் கொத்து புரோட்டா, முட்டை கொத்து புரோட்டா, சில்லி புரோட்டா, சிலோன் புரோட்டா, சிலோன் சிக்கன் புரோட்டா என புரோட்டாவின் அனைத்து வகைகளையும் மதுரையின் ஸ்பெஷல் சால்னாவுடன் வெளுத்துக் கட்டலாம். புரோட்டா வேண்டாம். ஆனால், மதுரையின் காரசாரமான அசைவம் வேண்டும் என்பவர்களுக்காக, மணக்க மணக்க அயிரை மீன் குழம்பு, மத்தி மீன் குழம்பு, நெய் மீன் குழம்பு என மீன் சாப்பாடு இருக்கிறது.
ஃபிரை வகைகளில் மட்டும் மீன், இறால், கனவா, நண்டு , நெய் மீன், நெத்திலி ஃபிரைகளை ருசிக்கலாம். நண்டு லாலிபாப், சுறாமீன் புட்டு, சங்கு கறி, இறால் கிரேவி, நண்டு கிரேவி, கடல் மீன் ஆம்லெட், நண்டு ஆம்லெட், ஃபிஷ் பிங்கர், நத்தைக் கறி கிரேவி என சொல்லவே மூச்சு முட்டும் அளவுக்கு மதுரை மண் மணக்க அசைவத்தை ஒரு வெட்டு வெட்டலாம். இவற்றையெல்லாம் முடித்து விட்டு, மதுரைக்கே உரிய ஜிகர்தண்டாவைக் குடிக்காவிட்டால் எப்படி. அதுவும் இருக்கு மக்களே!
மதுரையில் இருந்து அப்படியே திண்டுக்கல் வந்தால், நாங்கள் மட்டும் என்ன தொக்கா என்பது போல, திண்டுக்கல் வேணு பிரியாணி வெரைட்டியாக பரிமாறுகிறது. மட்டன் பிரியாணி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை, பிரைடு சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன், கரண்டி ஆம்லெட், சிக்கன் பிரை, காடை பிரை என நினைவில் நிற்கும் சுவையுடன் சுடச்சுட தருகிறார்கள்
எல்லாமே அசைவமாக இருக்கிறதே என்பவர்களுக்காக, இட்லி விருந்து அரங்கில், பெப்பர் இட்லி, பூண்டு இட்லி, பட்டர் பொடி இட்லி, சேவை, அப்பம், இடியாப்பம் என விதவிதமான சுவைகளில் விருந்து படைக்கிறார்கள். வெஜ் நூடுல்ஸ் ஃபிரைடு ரைஸ், பன்னீர் ஃபிரைடு ரைஸ், மஸ்ரூம் ஃபிரைடு ரைஸ் அரங்குகளும் உள்ளன. 99 வகையான தோசை வழங்குவதற்காகவே சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
பீட்சா, பர்கர் பிரியர்களுக்காக, கே.எப்.சி.,யும், சப்வேயும் அரங்கு அமைத்திருக்கின்றனர். இதெல்லாம் உள்ளூர் சரக்காக இருக்கிறதே, புதிதாக ஏதேனும் டிரை செய்வோம் என நினைப்பவர்களுக்காக, ஜப்பானின் ரேமென், கொரியன் ஃபிரைடு விங்ஸ், கொரியன் பாவோ, ஹனி சிக்கன் என வெளிநாட்டு உணவு வகைகளும் காத்திருக்கின்றன.
இதெல்லாம் ஹெவியா இருக்கே, கொஞ்சம் லைட்டா கொறிக்கலாம், குடிக்கலாம் என நினைத்தால், அதற்கும் இருக்கவே இருக்கிறது புட் ஜாக். புளூ ரெயின், நீல்கிரி ஸ்கை, விர்ஜின் மொயிட்டோ, கிவி ப்ரீஸ், மிர்ச்சி குவாவா என மாக்டெய்ல்கள் இருக்கின்றன.
ராகி பக்கோடா, ஆனியன் பக்கோடா, பஞ்சாபி சமோசா, பஜ்ஜி வகைகள், பேல் பூரி, தஹிபுரி மசாலா பூரி, சன்னா சமோசா போன்ற சாட் வகைகளுக்கும் பஞ்சமில்லை.
மணக்க மணக்க பில்டர் காபி, பருத்திப் பால், தேங்காய்ப் பால், பானகம், இளநீர் பாயாசம், வாழைப்பூ பாயாசம் என வியக்க வைக்கும் வெரைட்டிகள் உள்ளன.குழந்தைகளுக்காக பான் பானின் ஆறு வகையான சுவைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்பைரல் பொட்டேட்டோவை வேண்டாம் என எந்தக் குழந்தையும் சொல்லாது.
இதெல்லாம் பத்தாது பாரம்பரிய உணவு ஏதேனும் இருக்கிறதா என்கிறீர்களா. அதுவும் இருக்கிறது மக்களே!
நற்றிணை தேன் தினையில் 100 சதவீத சுத்த சைவ உணவுகள் கிடைக்கும். நவதானிய லட்டு, எள்ளுருண்டை, இனிப்பு புட்டு, சிவப்பு அரிசி அவல் உப்புமா, கருப்பட்டி தேங்காய்ப்பால் அல்வா, குதிரைவாலி அல்வா, ராகி அல்வா, திணை அல்வா, கருப்பு கவுனி பழைய சோறு, உளுந்தங் கஞ்சி, முடவாட்டுக் கால் சூப், சிறுதானிய முறுக்கு வகைகள், அதிரசம் என ஆரோக்கிய விரும்பிகளுக்கு ஏற்ற பாரம்பரிய உணவுகள் கிடைக்கும்.
அப்புறம் என்ன மக்களே, குடும்பத்தோடு வாங்க, உணவுத் திருவிழாவை சிறப்பிக்கலாம்.

