/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
/
மாகாளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
மாகாளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
மாகாளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
ADDED : மார் 28, 2024 05:35 AM

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் விரதமிருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 11ம் தேதி திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பூவோடு எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் குண்டம் திறப்பு, விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு எடுத்தல், அகத்துார் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், அக்னி குண்டம் வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று காலை, 7:40 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. விரதம் இருந்த பக்தர்கள், 60 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை, சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிேஷகம் நடக்கிறது.