/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
ADDED : ஆக 29, 2024 02:34 AM

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில் உள்ள, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, நேற்று அஷ்டதிரவிய ேஹாமம் மற்றும் யாக வழிபாடு துவங்கியது.
பொள்ளாச்சி நகரில், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் (நாளை), 30ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாஹம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை, தனபூஜை மற்றும் கணபதிேஹாமம் நடந்தது.
தொடர்ந்து, அஷ்டதிரவிய ேஹாமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாலை, 4:00 மணிக்கு கும்பஸ்தாபனம், கலாரக் ஷனம், ஆவாஹனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, நடந்தது.
இன்று, காலை, 8:30 மணிக்கு இரண்டாம்கால யாகம், பகல், 12:30 மணிக்கு மேல் உபசார வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு மேல் மூன்றாம்கால யாகம், இரவு 8:00 மணிக்கு, சங்க்யா ேஹாமம் நடக்கிறது.
நாளை காலை, 5:30 மணிக்கு நான்காம்கால யாகம், காலை, 8:15 மணிக்கு பத்ரகாளியம்மன் விமான கோபுரம் மற்றும் பரிவார விமானங்கள் கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, 8:45 மணிக்கு விநாயர் முதற்கொண்டு அனைத்து பரிவார தெய்வங்கள் மற்றும் பத்ரகாளியம்மன் மூலாலய கும்பாபிேஷகம், தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு மேல் அன்னதானம், மாலையில் அபிேஷகம், விேஷச அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.

