ADDED : மார் 09, 2025 11:29 PM

கருமத்தம்பட்டி; கணியூர், கிட்டாம்பாளையத்தில் மகிளா கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
உலக மகளிர் தினத்தை ஒட்டி, சூலுார் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் நேற்று முன் தினம் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. கணியூரில் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் கிராம சபை நடந்தது.
கருமத்தம்பட்டி போலீஸ் ஏட்டு பிரேமலதா, ஆசிரியை ரஞ்சிதம், ஒன்றிய அலுவலக ஜீப் டிரைவர் சுமிஜா, தபால் நிலைய அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பி.டி.ஓ., முத்துராஜு, முன்னாள் தலைவர் வேலுசாமி, வி.ஏ.ஓ., வெங்கடேசன், செயலர் ஜெகதீசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிட்டாம்பாளையத்தில் நடந்த மகிளா சபா கூட்டத்தில் செயலர் மாருக்குட்டி தலைமை வகித்தார்.
துாய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தாடை வழங்கப்பட்டது. வி.எம்.சி., பாரத் காஸ் சார்பில், அதன் உரிமையாளர் சந்திரசேகர், போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கினார். ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே மகிளா சபா கூட்டங்கள் முறையாக நடந்தன. மற்ற ஊராட்சிகளில் மகிளா சபா கூட்டம் நடப்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை.
அதனால், அந்த ஊராட்சிகளில் பேருக்கு கூட்டங்களை நடத்தி, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.