/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
/
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஆக 27, 2024 02:25 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சி ராஜாமில் ரோடு பெட்ரோல் பங்க் அருகே, கடந்த மாதம் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியைச்சேர்ந்த காளீஸ்வரன் என்பவரை, போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதே வழக்கில், கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த, சூளேஸ்வரன்பட்டியைச்சேர்ந்த மணிகண்டனை கடந்த, 15 நாட்களுக்கு முன்பு கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த, ஆறு மாதத்துக்கு முன்பு, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு நல்லுார் அருகே சரக்கு வாகனத்தில், மூன்று டன் அரிசி கடத்திய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் மணிகண்டன் என தெரிய வந்தது.
குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், குண்டர் தடுப்புச்சட்டத்தில் இவரை கைது செய்ய, கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கிராந்திகுமார், சம்பந்தப்பட்ட மணிகண்டனை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஏற்கனவே, கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ளவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.