/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3,500 சதுரடிக்கு மேலான குடியிருப்புக்கும் வரைபட அனுமதி கட்டணம் உயர்ந்தாச்சு!
/
3,500 சதுரடிக்கு மேலான குடியிருப்புக்கும் வரைபட அனுமதி கட்டணம் உயர்ந்தாச்சு!
3,500 சதுரடிக்கு மேலான குடியிருப்புக்கும் வரைபட அனுமதி கட்டணம் உயர்ந்தாச்சு!
3,500 சதுரடிக்கு மேலான குடியிருப்புக்கும் வரைபட அனுமதி கட்டணம் உயர்ந்தாச்சு!
ADDED : செப் 01, 2024 02:11 AM
கோவை;தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 3,500 சதுரடிக்கு மேல் குடியிருப்பு கட்டுவதற்கும் வரைபட அனுமதி கொடுப்பதற்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சுய சான்று அடிப்படையில், கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கு, 2,500 சதுரடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய, முதல் தளம் கட்டுவதற்கு இணைய வழியில் அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் சதுரடிக்கு ரூ.100, கோவை, திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.88 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு மடங்கு கட்டணம் அதிகமானதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதனால், சில திருத்தங்கள் செய்து, ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயித்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், சதுரடிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்குள் ஆய்வு கட்டணம், கட்டட அனுமதி கட்டணம், அனுமதி காட்சி பலகை கட்டணம், தொழிலாளர் நல நிதி
கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கட்டட இடிபாடு அகற்றுதல் கட்டணம், உள்ளூர் திட்ட குழும கட்டணம், கட்டட அனுமதி வைப்புத்தொகை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும், 3,500 சதுரடி பரப்பளவு கொண்ட, இரண்டு குடியிருப்புகளுக்கு மிகாமல், தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட, ஏழு மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட கட்டுமானம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசாணைக்குள் வராத இதர கட்டுமானங்களுக்கு, ஏற்கனவே அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களால் நிர்ணயித்து, நடைமுறையில் உளள கட்டணங்கள், அரசாணையில் நிர்ணயித்துள்ள கட்டடங்களுக்கு இணையாக உள்ளதா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
ஏனெனில், புதிதாக நிர்ணயித்துள்ள கட்டணம் சதுரடிக்கு, 88 ரூபாயாக இருக்கிறது; இதற்கு முந்தைய கட்டணம், 79 ரூபாயாக இருந்தது. தற்போதைய உத்தரவுப்படி, சதுரடிக்கு, 9 ரூபாய் உயர்த்தப்பட்டு, 3,500 சதுரடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு பொருந்தும் என மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.