/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
மாரியம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மாரியம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மாரியம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : பிப் 25, 2025 10:24 PM
வால்பாறை, ; சோலையாறு எஸ்டேட் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அடுத்துள்ள சோலையாறு எஸ்டேட் முனீஸ்வரன் சுவாமி கோவிலில், 31ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் மேலாளர்கள் பரிசோத்சதுர்வேதி, விஜேயந்திர அர்ஜூனா ஆகியோர் ஏற்றினர்.
விழாவில், வரும் 28ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மாரியம்மன் கோவில் வளாகத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
வரும், மார்ச் 1ம் தேதி சோலையாறு 3ம் பிரிவு முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்தும், பல்வேறு கோவில்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவில், முக்கிய நிகழ்வாக வரும், 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு முனீஸ்வரன் கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் செய்து வருகின்றனர்.