/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோமாரி நோய் தடுப்பூசி; இலக்கு பூர்த்தி
/
கோமாரி நோய் தடுப்பூசி; இலக்கு பூர்த்தி
ADDED : ஆக 01, 2024 12:46 AM
பொள்ளாச்சி : கால்நடைகளுக்கு நுாறு சதவீத கோமாரி தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும், இரு கட்டங்களாக,கோமாரி நோய் தடுப்பூசி முகாம், கால்நடை துறை சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில், 86 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உதவி இயக்குனர் ஓம்முருகன் தலைமையில், 33 கால்நடை மருந்தகங்களில், ஒரு கால்நடை டாக்டர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை உதவியாளர் அடங்கிய குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்ததன் காரணமாக, நடப்பாண்டு, நுாறு சதவீத தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கால்நடைத்துறையினர் கூறியதாவது: கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த விவசாயிகள் முனைப்பு காட்டினர். இனி வரும் நாட்களில், கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, தடுப்பூசி போடும் பணி துவக்கப்படும்.
இந்நோய் பாதித்தால் கால்நடைகளின் உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாது. படிப்படியாக பால் உற்பத்தி குறைந்து, உயிரிழப்பு ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்.எஸ்.டி., எனப்படும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினர்.