ADDED : ஜூலை 20, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ணா மடம், மேட்டுப்பாளையம் தனியார் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் இலவச மருத்துவ முகாமை நடத்தின.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையில், முகாமை காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மருத்துவர் நந்தகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகங்களில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முகாமில் வனவர்கள் சிங்காரவேலு, சுரேந்திரன், மகாதேவன், பேராசிரியர் ஜெய்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
----
