/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணைக்கு குறைந்தது நீர்வரத்து
/
சிறுவாணி அணைக்கு குறைந்தது நீர்வரத்து
ADDED : ஜூலை 29, 2024 03:31 AM
கோவை;மழை இல்லாததால், சிறுவாணி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது, சிறுவாணி அணை. பாதுகாப்பு காரணங்களை கூறி, கேரள நீர்பாசனத்துறை துறை, அணையின் முழுக்கொள்ளளவான, 50 அடி நீர் தேக்காமல், 45 அடி வரை மட்டுமே தேக்கி வருகிறது.
கடந்த வாரம், அணையில் இருந்து, 1,000 கனஅடி நீரை வெளியேற்றப்பட்ட நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால், நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, மழைப்பொழிவு குறைந்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில் மழை இல்லை. அணைப்பகுதியில், ஒரு மி.மீ., மட்டுமே மழைப்பொழிந்தது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம், 42.28 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.359 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
வரும் நாட்களில் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.