ADDED : ஜூன் 06, 2026 06:11 PM

“பேஷன் என்பது விலையுயர்ந்த ஆடைகளில் இல்லை; அதை நாம் எவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜியுடனும், தன்னம்பிக்கையுடனும் அணிகிறோம் என்பதில்தான் இருக்கிறது,” என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் பிரியங்கா பழனிசாமி.
தரமான வெள்ளை குர்தா உங்களிடம் இருந்தால், அது ஒரு மேஜிக் ஆடைக்கு சமம். அதை ப்ளூ ஜீன்ஸுடன் அணிந்து கூலான ‘இண்டோ- – வெஸ்டர்ன்’ லுக்கிலும், லெகிங்ஸ் மற்றும் பல வண்ண துப்பட்டாக்களுடன் மேட்ச் செய்து, பக்கா ‘எத்னிக்’ லுக்கிலும் அசத்தலாம்.
எந்த சாதாரண உடையையும், ஸ்டைலிஷாக மாற்ற ஒரு கருப்பு ஓவர்-கோட் இருந்தால் போதும். அது உங்கள் தோற்றத்திற்கு போல்டான, கிளாசிக் டச் கொடுக்கும்.
குறிப்பாக, ஆடைகளில் பல வண்ணங்களை ஒரே நேரத்தில் அணிவதை தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, தலை முதல் கால் வரை ஒரே நிறத்திலோ அல்லது அதே நிறத்தின் வெவ்வேறு ஷேடுகளிலோ ஆடைகளை அணியும், ‘மோனோக்ரோம்’ ஸ்டைலைத் தேர்வு செய்யலாம்.
இந்த ஸ்டைலில் எப்போதும் மாஸ் காட்டுவது கருப்புதான். கருப்பு டாப் அல்லது ஷர்ட்டுடன் கருப்பு ஜீன்ஸ் அல்லது பேன்ட்ஸ் அணிந்தால் நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.
மோனோக்ரோம் ஸ்டைலில் ஆடை அணியும்போது, மேலிருந்து கீழ்வரை ஒரே வகை துணிகளை (உதாரணமாக முழுவதும் காட்டன்) பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
அதற்கு பதிலாக, காட்டன் டாப்புடன் டெனிம் ஜீன்ஸ் அல்லது சில்க் ஸ்கர்ட் என வெவ்வேறு டெக்ஸ்சர்களை (Textures) இணைத்து அணியுங்கள்.
உங்கள் தோற்றத்திற்கு கூடுதல் ஸ்டைல் கிடைக்கும். மேட்ச்சாக கோல்டன் அல்லது சில்வர் நிற ஆபரணங்களை அணிந்தால் வேற லெவல்!
