/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப் - கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு
/
சப் - கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு
சப் - கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு
சப் - கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு
ADDED : ஏப் 05, 2024 10:49 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், மாதிரி ஓட்டுச்சாவடி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், ஆண்கள், 7,66,077, பெண்கள், 8,15,428 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 290 என, மொத்தம், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர்.நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என, மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.வரும், 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கு தேவையான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஓட்டுச்சாவடிகளில் வசதிகள் மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சப் - கலெக்டர் அலுவலகத்தில், மாதிரி ஓட்டுச்சாவடி மக்கள் பார்வைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில், ஓட்டுச்சாவடி முகப்பு பகுதியில், வேட்பாளர்கள் பெயர், சின்னம், ஓட்டு அளிக்க என்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்ற விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே சென்றதும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் பெயர், விபரம் சரிபார்த்து, ஓட்டுரிமை அளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி ஓட்டுச்சாவடியை மக்கள் பார்த்து செல்கின்றனர்.

