ADDED : ஜூலை 14, 2026 04:00 PM

அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சியின் 100 வார்டுகளில் 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி சம்பளம் வந்து விடும். இம்மாதம் தற்போதுவரை சம்பளம் வரவில்லை
அந்த பணியாளர்கள் வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். கமிஷனர் ரவி தேஜாவிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை.
இதனால் 66வது வார்டு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பணிக்கு சென்றனர்.
