/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் தடுப்பில்லை வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
/
ரோட்டோரத்தில் தடுப்பில்லை வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ரோட்டோரத்தில் தடுப்பில்லை வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ரோட்டோரத்தில் தடுப்பில்லை வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 09, 2024 11:49 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்தூர் - பெரியகளந்தை செல்லும் ரோட்டில், தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வடசித்தூர் - நெகமம் ரோட்டில் இருந்து, பெரியகளந்தை செல்லும் ரோடு 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த ரோட்டில் அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் இரண்டு பகுதியிலும் விளைநிலங்கள், ஐந்து அடிக்கும் மேல் தாழ்வாக உள்ளது.
இந்த ரோடு குறுகலாகவும், ஆங்காங்கே சேதம் அடைந்து பள்ளங்களாகவும் உள்ளது. இதனால் பைக்கில் சென்று வருவோர் சிரமப்படுகின்றனர்.
இந்த ரோட்டில், விளை பொருட்கள் மற்றும் தீவனம் போன்றவைகள் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
ரோட்டோரத்தில் தடுப்புகள், மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் செல்பவர்கள், ரோட்டின் ஓரத்தில் உள்ள விளைநிலத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டின் ஓரத்தில் தாழ்வான இடங்களில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

