/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ--பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள் ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
/
இ--பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள் ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
இ--பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள் ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
இ--பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள் ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
ADDED : ஜூலை 02, 2024 02:32 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம்-கல்லார் இ--பாஸ் சோதனை சாவடியில் இ--பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
நீலகிரியில் மே 7ம் தேதி முதல் இ--பாஸ் முறை அமலுக்கு வந்தது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ--பாஸ் சோதனை நடந்து வருகிறது. கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில் மேட்டுப்பாளையம் கல்லார் தூரிப்பாலம் அருகே இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ--பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இ--பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி, இ--பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி, வருவாய் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, இ--பாஸ்எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே இ--பாஸ் இல்லாதவர்கள், சோதனை சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து அங்கு பணிபுரியும் வருவாய் துறையினர் கூறுகையில், 'நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை. இதனால் அவ்வாகனங்கள், அரசு பஸ்கள் போன்றவைகள் சோதனை செய்வது கிடையாது. ஆனால் பிற மாவட்டங்கள், மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் தேவை. அந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, முன்னால் சென்ற நீலகிரி வாகனத்தை சோதனை செய்வது கிடையாது, எங்கள் வாகனத்தை ஏன் சோதனை செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜி.ஓ.,ஆர்டர் காண்பிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இ--பாஸ் எடுத்து தர நாங்கள் உதவும் போது, காலதாமதம் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் கோபம் அடைகின்றனர்.
இ--பாஸ் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும். பிற மாநிலங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்,' என்றனர்.