/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் முருகன் படத்துக்கு மவுசு! தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தகவல்
/
தென்னை நார் முருகன் படத்துக்கு மவுசு! தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தகவல்
தென்னை நார் முருகன் படத்துக்கு மவுசு! தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தகவல்
தென்னை நார் முருகன் படத்துக்கு மவுசு! தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தகவல்
ADDED : செப் 01, 2024 02:17 AM

பொள்ளாச்சி;''தென்னை நாரில், தயாரிக்கப்படும் முருகர் உள்ளிட்ட படத்துக்கு வெளிநாட்டினரிடம் மவுசு அதிகரித்துள்ளது,'' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் தெரிவித்தார்.
இந்தியாவில், 14 மாநிலங்களில், தென்னை சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன; 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.
தென்னை நார், கோகோ பித் பயன்படுத்தி, 5,000க் கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்தயாரிக்கப்படுகின்றன. அதில், தென்னை நார் கொண்டு விரிப்பு போன்று சீட் தயாரித்து, அதில், முருகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
உலகளவில் ஆண்டுக்கு, 55 கோடி மரங்கள் வெட்டப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு வெட்டுவதால், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை உலக நாடுகள் சந்திக்கும் நிலை உள்ளது.
ஒரு விரிப்பு சீட் தயாரிக்க, ஆறு கிலோ முதல் எட்டு கிலோ மரங்களும், 120 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. மரங்களை வெட்டாமலும், தண்ணீர் இன்றியும் தென்னை நார் தாள்களை (விரிப்பு) தயாரிக்க முடியும்.
மேலும், 3 மி.மீ., முதல், 20 மி.மீ., கனம் உள்ள தென்னை நார் தாளில், படங்கள் தயாரிக்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தி, இயற்கையான உயிரோவியம் உள்ள படங்கள், முருகர், கிருஷ்ணர், விநாயகர், இயற்கை காட்சிகள் தயாரிக்கப்படுகின்றன. பெரிய அரங்கங்களில், இந்த தென்னை நார் தாள்களை உபயோகப்படுத்தும் போது, ஒலி அதிர்வுகளை தடுக்க முடியும்.
தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட முருகர் படத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டினரிடம் மவுசு அதிகரித்துள்ளது. முருகன் முத்தமிழ் மாநாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த வெளிநாட்டினர், 50 முருகர் படம் அனுப்பி வைக்குமாறு கூறிச் சென்றார். இது மட்டுமின்றி தென்னை நாரை பயன்படுத்தி பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு, கூறினார்.