ADDED : ஜூன் 29, 2026 06:01 PM
வால்பாறை: திறந்த வெளியில் பழக்கழிவுகளை வீசினால், அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில் மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், விற்பனையாகாத அழுகிய நிலையில் உள்ள மாம்பழங்களை, வியாபாரிகள் சாலையோரம் திறந்த வெளியில் வீசுகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் திறந்த வெளியில் வீசப்படும் பழக்கழிவுகளை, கால்நடைகள் உணவாக உட்கொள்கின்றன.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘திறந்த வெளியில் பழக்கழிவுகளை ஒரு போதும் கொட்டக்கூடாது என்று வியாபாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அழுகிய நிலையில் காணப்படும் பழக்கழிவுகளை, பாதுகாப்பாக முறையில் குப்பைக்கிடங்கில் கொட்ட வேண்டும். திறந்த வெளியில் பழக்கழிவுகளை வீசும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றனர்.
