/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நமக்கு நாமே' திட்ட நிதி தாமதம்; ஊராட்சி தலைவர்கள் 'திக்... திக்...'
/
'நமக்கு நாமே' திட்ட நிதி தாமதம்; ஊராட்சி தலைவர்கள் 'திக்... திக்...'
'நமக்கு நாமே' திட்ட நிதி தாமதம்; ஊராட்சி தலைவர்கள் 'திக்... திக்...'
'நமக்கு நாமே' திட்ட நிதி தாமதம்; ஊராட்சி தலைவர்கள் 'திக்... திக்...'
ADDED : செப் 08, 2024 05:40 AM

திருப்பூர்: மக்கள் பங்களிப்பு செலுத்தியுள்ள, 'நமக்கு நாமே' திட்ட பணிகளுக்கு விரைவாக நிதி ஒதுக்கி, பணி உத்தரவு வழங்க வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில், பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்தும் தொகையுடன், அரசு இரண்டு மடங்கு பங்களிப்பு நிதியாக வழங்குகிறது.
மாவட்ட நிர்வாகம், அங்கீகார அனுமதி வழங்கி, ஊரக வளர்ச்சித்துறை அல்லது மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சி பொறியாளர் வாயிலாக, பணிகளை மேற்கொள்கிறது.
ஊராட்சி தலைவர், கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில், மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டுமென, ஆர்வம் கொண்டிருக்கின்றனர். போதிய நிதி ஆதாரம் இல்லாததால், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி உதவி கேட்கின்றனர்.
அதன்பின், நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பெற்று, மக்கள் பங்களிப்பாக செலுத்தி, நமக்கு நாமே திட்டத்திலும், அத்தியாவசிய பணிகளை செய்து வருகின்றனர்.
அவ்வகையில், மாநில அளவில், 'நமக்கு நாமே' திட்ட பணிகளை மேற்கொள்வதில், திருப்பூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக உயர்ந்துள்ளது.
ஆனால், 'நமக்கு நாமே' திட்டத்தில், நிதியுதவி கேட்டு விண்ணப்பித்ததில், செப்., மாதமாகியும், ஒதுக்கீடு செய்யாததால், பணிகளை துவக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, டிச., மாதத்துடன் தங்களது பதவி முடிவுற இருப்பதால், தங்கள் பதவிக்காலத்திலேயே பணிகளை துவக்கி வைக்க வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
மக்களுக்கு, தேவையான பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தில் பணிகளை செய்து கொடுத்து வருகிறோம். இந்தாண்டில், விண்ணப்பம் அளித்தும், இதுநாள் வரை, நிதி ஒதுக்கீடும், பணி அனுமதியும் வழங்கப்படாமல் இருக்கிறது.
சிரமப்பட்டு, மக்கள் பங்களிப்பை செலுத்தியிருக்கிறோம்; அனுமதி கிடைத்தால், பணிகளையும் துவக்கி, முடித்து வைத்து, நிறைவாக பதவியை நிறைவு செய்வோம்.
எனவே, இதில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.