ADDED : ஆக 10, 2026 08:20 PM
கோவை: சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் எஸ்.ஏ.இ. இந்தியா தெற்கு பிரிவு அமைப்புடன் இணைந்து, டிரோன் மேம்பாட்டு பயிலரங்கை நடத்தியது. நாடு முழுதும் 28 கல்லுாரி அணிகளைச் சேர்ந்த, 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார், விண்வெளியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இளம் பொறியாளர்களின் பங்கு குறித்து விளக்கினார்.
பயிலரங்கில் ட்ரோன் உடற்கட்டமைப்பு உருவாக்கம், பிளைட் கன்ட்ரோலர் அமைத்தல், தகவல் தொடர்பு அமைப்புகள், பறப்புச் சோதனை மற்றும் பாதுகாப்பு, நேரடி பறப்பு செயல்விளக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. எஸ்.ஏ.இ. இந்தியா தெற்கு பிரிவு தினேஷ் ஷ்யாம் சுந்தர், கல்லுாரி முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
