/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ரோல்பால் 'சாம்பியன்ஷிப்' போட்டி
/
தேசிய ரோல்பால் 'சாம்பியன்ஷிப்' போட்டி
ADDED : செப் 17, 2024 11:26 PM
கோவை : புனேவில் நடந்த தேசிய அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக ஆண்கள் அணி மூன்றாம் இடம் பிடித்தது.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, 17வது தேசிய அளவிலான சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த, 12 முதல் 15ம் தேதி வரை நடந்தன.
இப்போட்டியில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 27 ஆண்கள் அணிகளும், பெண்கள் பிரிவில், 20 அணிகளும் பங்கேற்றன.
'லீக்' முறையில் நடந்த போட்டியில், துடிப்புடன் விளையாடிய தமிழ்நாடு ஆண்கள் அணியினர் அனைத்து போட்டிகளிலும், வெற்றி வாகை சூடினர். காலிறுதி போட்டியில், தமிழ்நாடு ஆண்கள் அணி, 7-4 என்ற கோல் கணக்கில், மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து, அரையிறுதி போட்டியில், 2-6 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணியிடம் தோல்வியை தழுவி, மூன்றாம் இடம் பிடித்தது.
தமிழ்நாடு பெண்கள் அணி 2-0 என்ற கோல் கணக்கில், மகாராஷ்டிரா அணியையும், 5-4 என்ற கோல் கணக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியையும், 5-4 என்ற கோல் கணக்கில் கோவா அணியையும் வென்றது.
காலிறுதியில், அசாம் அணி யுடன் தோல்வி அடைந்ததால், பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது. வெற்றி பெற்ற அணியினரை, தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், தலைமை பயிற்சியாளர் ராஜசேகர் ஆகியோர் பாராட்டினர்.