/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை
/
ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை
ADDED : ஜூலை 06, 2024 07:47 PM
கோவை:கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரூ.18 ஆயிரத்திலும், இடைநிலை ஆசிரியர் ரூ.12 ஆயிரம் மாதத் தொகுப்பூதியத்திலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்படுவர்.
ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தாவரவியல் மற்றும் தமிழ் ஆகிய பாடப்பிரிவுக்கு, இருவர் நியமிக்கப்பட உள்ளனர்.
சின்கோனா, குளத்துப்பாளையம், பெரிய கல்லார், காளிமங்கலம், வடவேடம்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளிகளில், காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஐந்து பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், நிரந்தர பணியாளர் நியமிக்கப்படும் வரை பணியில் இருப்பர்.
வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், 8ம் தேதி (திங்கட்கிழமை) மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.