/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்புதல் பெற சென்னை போகணும்; 'லேட்' ஆகுது! மாவட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும் நடவடிக்கை
/
ஒப்புதல் பெற சென்னை போகணும்; 'லேட்' ஆகுது! மாவட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும் நடவடிக்கை
ஒப்புதல் பெற சென்னை போகணும்; 'லேட்' ஆகுது! மாவட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும் நடவடிக்கை
ஒப்புதல் பெற சென்னை போகணும்; 'லேட்' ஆகுது! மாவட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும் நடவடிக்கை
ADDED : ஜூலை 05, 2024 02:35 AM
கோவை;'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' ஒப்புதலுக்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், கன்சல்டிங் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்கள் பலருக்கு ஒப்புதல் வழங்கும் அனுமதி கொடுத்தால், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் முன், 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' என்பது மிகவும் அத்தியாவசியம். பில்லர் துவங்கி, அறைகளின் தன்மைகளுக்கு ஏற்ப, எங்கெங்கு எவ்வளவு கம்பி தேவைப்படும் என்பன உட்பட பல விபரங்கள் இதில் தெரிவிக்கப்படும். கட்டடம் நிலைபெற்ற கட்டடங்களாக நிலைத்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம், 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்'. கட்டடம் கட்டுவதற்கான 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' பெற்ற பின், அந்த டிசைனில் குறிப்பிட்டுள்ள படி பணிகள் மேற்கொள்ளும் போது, கட்டடம் நிலைத்து நிற்கும்.
இந்நிலையில், 60 அடி உயரத்துக்கு மேற்பட்ட கட்டடங்கள் கட்டும் போது, ஸ்ட்ரக்சுரல் டிசைன் பணிகளுக்கு, சென்னை சென்று ஒப்புதல் வாங்க வேண்டியுள்ளது. பல மாவட்டங்களில் இருந்தும் சென்னை சென்று ஒப்புதல் வாங்கக் கூடிய நிலையில், கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், கன்சல்டிங் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அனுமதி வழங்கினால், கால தாமதத்தை தவிர்க்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கன்சல்டிங் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் கோவை மைய தலைவர் சுதாகர் கூறியதாவது:
சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று, 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறை இன்றும் உள்ளது. தவிர, சமீபத்தில், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., அல்லது அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள சிவில் இன்ஜினியர்களிடமும் ஒப்புதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு அதன் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒப்புதல் வழங்கும் நிலையில் இருக்கும் இன்ஜினியர்கள், சிலர் வடிவமைத்திருக்கும் டிசைனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதனாலும் கால தாமதம் ஏற்படுகிறது. தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒப்புதல் பெற வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் ஒப்புதல் வழங்க முடியாமல் போகிறது. இக்காலத்தில், கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டால், கட்டடம் கட்டும் நபர்களுக்கு செலவும் அதிகரிக்கிறது.
எனவே, இதுபோன்ற காலதாமதத்தை தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், கன்சல்டிங் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியமித்து, ஒப்புதல் வழங்கும் அனுமதி வழங்கினால், பணிகள் மேற்கொள்ள எளிதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.