/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
/
'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
ADDED : மே 03, 2024 09:21 PM
- நமது நிருபர் -
கோவை மாவட்டத்தில் 'நீட்' பயிற்சி மேற்கொண்டு வரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இறுதி மாதிரித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2024 -- 2025ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 மொழிகளில் நாளை, 5ம் தேதி நேரடி முறையில் நடக்கவுள்ளது.
2023--2024ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 'நீட்' தேர்வை, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 371 பேர் எழுதவுள்ளனர். 250க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் சி.சி.எம்.ஏ. பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ்., ஆண்கள் பள்ளி ஆகிய மூன்று 'நீட்' பயிற்சி மையங்களில், இறுதி மாதிரித் தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம், 175 மாணவர்கள் எழுதினர்.