/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுாரில் ஒன்பது நாய்கள் ரத்தம் கக்கி சாவு; மக்கள் பீதி
/
வெள்ளலுாரில் ஒன்பது நாய்கள் ரத்தம் கக்கி சாவு; மக்கள் பீதி
வெள்ளலுாரில் ஒன்பது நாய்கள் ரத்தம் கக்கி சாவு; மக்கள் பீதி
வெள்ளலுாரில் ஒன்பது நாய்கள் ரத்தம் கக்கி சாவு; மக்கள் பீதி
ADDED : மார் 06, 2025 12:29 AM
போத்தனூர்:
கோவை, வெள்ளலூர் பேரூராட்சியின், 15வது வார்டுக்குட்பட்ட திருவாதிரை பேரடைஸ் குடியிருப்பில், 120க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த இரு வாரங்களில் இப்பகுதியில் எட்டு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை.
நேற்று முன்தினமும் நாய் ஒன்று உயிரிழந்தது. இந்நாய் அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளத்தில், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர் கதிர்வேலு கூறியதாவது: இப்பகுதியில் இதுவரை ஒன்பது நாய்கள், ஒரே மாதிரியாக ரத்தம் கக்கி இறந்துள்ளன. நாய்களுக்கு யாரோ விஷம் கலந்த உணவை கொடுத்ததாக தெரிகிறது.
இறந்த நாய்களை சென்று பார்த்த, இரு குழந்தைகள் உள்பட நான்கு பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இறந்த நாய்களை சோதனை செய்தால், காரணம் தெரியவரும். இப்பகுதியில் திருட வந்தவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.