/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவாரி அருகில் உயர் அழுத்த மின்பாதை வேண்டாம்! மாற்றியமைக்க வேண்டாமென வலியுறுத்தல்
/
குவாரி அருகில் உயர் அழுத்த மின்பாதை வேண்டாம்! மாற்றியமைக்க வேண்டாமென வலியுறுத்தல்
குவாரி அருகில் உயர் அழுத்த மின்பாதை வேண்டாம்! மாற்றியமைக்க வேண்டாமென வலியுறுத்தல்
குவாரி அருகில் உயர் அழுத்த மின்பாதை வேண்டாம்! மாற்றியமைக்க வேண்டாமென வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 01:37 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பகுதியில், கல்குவாரிக்கு அருகில், உயர் அழுத்த மின்பாதையை மாற்றியமைப்பதை தடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.
கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சி தலைவர் ராம்குமார், சொக்கனூர் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர், கோவை மின் பகிர்மான வட்டத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வந்தது. குவாரியின் தென்பகுதியில், 10 மீட்டர் தொலைவில், 22 கிலோவாட் உயர் மின் பாதை வழியாக, பொட்டையாண்டிபுறம்பு, சொக்கனூர், வழுக்குபாறை, நெ.10 முத்தூர் ஊராட்சிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
குவாரிக்கு அருகில், உயர் மின் அழுத்த மின் பாதை செல்வதாலும், மக்கள் எதிர்ப்பாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குவாரி செயல்படுவதில்லை. மேலும், குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடக்கிறது.
மாவட்ட கலெக்டர், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளும் குவாரிக்கு அருகில் உயர் மின் அழுத்த மின் பாதை இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவு மின் வாரிய அதிகாரிகள், உயர் மின் பாதையை மாற்றி குவாரிக்கு மிக அருகில் அமைக்க முயற்சித்து வருகின்றனர். இதனால், 4 ஊராட்சியில் மின் வினியோகம் பாதிக்கப்படும். இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிணத்துக்கடவு மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குவாரி அருகே உள்ள இடத்தில், மின் பாதையை மாற்றியமைக்க பசுமை தீர்ப்பாயம் மற்றும் கனிமவளத்துறையிடம் இருந்து பணி செய்யக்கூடாது என, மின் துறைக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மட்டுமே செய்கிறோம்,' என்றனர்.