/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்படி கேட்டாலும் சொல்லிறாதீங்க கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு
/
எப்படி கேட்டாலும் சொல்லிறாதீங்க கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு
எப்படி கேட்டாலும் சொல்லிறாதீங்க கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு
எப்படி கேட்டாலும் சொல்லிறாதீங்க கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 27, 2025 12:13 AM
கோவை:பணமில்லா பரிவர்த்தனை குறித்து, கிராமப்புற மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ரொக்கப் பணப்பரிவர்த்தனையைக் குறைத்து, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. நகர்ப்புறங்களில், பெரும்பாலானோர், இந்நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மத்தியிலும், சமீபகாலமாக மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) நிதிசார் கல்வி மையம் சார்பில், கிணத்துக்கடவு, சூலுார், காரமடை உட்பட பல பகுதிகளில் இருக்கும் கிராம மக்களிடம், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் ரவி கூறியதாவது: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இன்று பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் முழுமையாக தெரிந்துக் கொள்ள, சிறப்பு முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமப்புறங்களில் மொபைல் போன்கள் பயன்படுத்துவோரிடம், குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., எண் வரும் பட்சத்தில், எதிர்முனையில் இருந்து யாராவது, மொபைல் போன்களில் உங்கள் வங்கிக் கணக்கு விபரங்கள் கேட்டால், பகிரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எதிர்பாராதவிதமாக கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் தெரியப்படுத்துகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.