/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் யு டேர்ன் தொல்லை சிக்னல் இருந்தால் சிக்கல் இல்லை
/
பஸ் ஸ்டாண்டில் யு டேர்ன் தொல்லை சிக்னல் இருந்தால் சிக்கல் இல்லை
பஸ் ஸ்டாண்டில் யு டேர்ன் தொல்லை சிக்னல் இருந்தால் சிக்கல் இல்லை
பஸ் ஸ்டாண்டில் யு டேர்ன் தொல்லை சிக்னல் இருந்தால் சிக்கல் இல்லை
ADDED : ஆக 31, 2024 01:38 AM

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் 'யு டேர்ன்' தொல்லையால் தினமும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூச்சியூர், ராக்கிபாளையம், புதுப்பாளையம், அப்புலுபாளையம் உள்ளிட்ட கிராமங்களும், அதை ஒட்டிய ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதியில் பூச்சியூர், அப்புலுபாளையம், டீச்சர்ஸ் காலனி, பாம்பே நகர், நாகாளம்மன் நகர், ஹைடெக் சிட்டி ராவுத்துக்குகொல்லனூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கிருந்து நூற்றுக்கணக்கானோர் தினசரி பல்வேறு பணி நிமித்தமாக கோவை சென்று வருகின்றனர். இவர்கள் கோவை செல்ல நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, 100 அடி சென்று 'யு டேர்ன்' திரும்பி, மீண்டும் கோவை நோக்கி செல்லும்படி போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல கோவையில் இருந்து வருபவர்கள் யு டேர்ன் வளைவில் திரும்பி நரசிம்மநாயக்கன்பாளையம், பழையூர், புதுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
யு டேர்ன் வளைவுக்கு அருகே பஸ் ஸ்டாண்ட் உள்ளதால், பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் போது, யு டேர்ன் வளைவில் திரும்பி கோவையை நோக்கியோ அல்லது புதுப்பாளையம் நோக்கி செல்லவோ பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, விபத்துகளும் நேரிடுகின்றன.
இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கூறுகையில்,' சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல பூச்சியூரில் இருந்து வருபவர்கள் மேட்டுப்பாளையம் ரோட்டை நேரடியாக கடந்து கோவை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம், பழையூர், புதுப்பாளையம் செல்ல வழி அமைக்க வேண்டும்.
போக்குவரத்தை நெறிப்படுத்த இப்பகுதியில் சிக்னல் அமைத்தால், விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம். இப்பிரச்னைக்கு போக்குவரத்து துறை, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என்றனர்.