/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை
/
ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை
ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை
ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை
ADDED : மார் 11, 2025 05:46 AM

கோவை : ரயிலில், ரூ.8 லட்சம் மதிப்பிலான, 16 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த நபரை, ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர்.
தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்டார்.
அவரது உடமைகளில் வெள்ளை நிறத்திலான பாலித்தீன் பண்டல்கள் இருப்பதை ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.
அவரை பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் ரூ.8 லட்சம் மதிப்பிலான, 16 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம், கட்டாக், நுார்தாங்காவை சேர்ந்த, கலிந்தி ஸ்வாய்ன், 35 என்பதும், விற்பனைக்காக, ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.