/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி, கார்டு உரசி சொத்து வரி செலுத்தலாம் :மாநகராட்சியிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை
/
இனி, கார்டு உரசி சொத்து வரி செலுத்தலாம் :மாநகராட்சியிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை
இனி, கார்டு உரசி சொத்து வரி செலுத்தலாம் :மாநகராட்சியிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை
இனி, கார்டு உரசி சொத்து வரி செலுத்தலாம் :மாநகராட்சியிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை
ADDED : ஆக 23, 2024 09:09 PM

கோவை:இனி, கையில் பணமாக ரொக்கம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது; வரியினங்கள் மற்றும் குடிநீர் கட்டணத்தை, 'வங்கி கார்டு' உரசி செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே, மிக முக்கியமான வருவாய். ஐந்து லட்சத்து, 77 ஆயிரத்து, 905 வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். ஏப்., - செப்., மற்றும் அக்., - மார்ச் என ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்க வேண்டும்.
2024-25 நிதியாண்டுக்கு ரூ.431.91 கோடி, கடந்த, 2023-24 நிதியாண்டு நிலுவையாக ரூ.117.60 கோடி என, மொத்தமாக, ரூ.549.51 கோடி வசூலிக்க வேண்டும். இதுவரை ரூ.135.05 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது; இன்னும் ரூ.414.46 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது.
முதல் அரையாண்டு முடிவதற்கு ஒரு மாதமே இருப்பதால், வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு வரி செலுத்த வருவோர் கண்டிப்பாக ரொக்கமாக பணம் கொண்டு வர வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதியில்லாமல் இருந்தது. அதனால், வங்கி கார்டு உரசி வரியினங்கள் செலுத்த முடியவில்லை.
இதேபோல், வரி வசூலிக்கச் செல்லும் பில் கலெக்டர்களில் சிலர், மக்களிடம் வசூலிக்கும் பணத்தை மாநகராட்சி மையத்தில் செலுத்தாமல், முறைகேடு செய்வதும் கண்டறியப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில், பில் கலெக்டர்களுக்கு வங்கி கார்டு உரசும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 45 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''முதல் கட்டமாக, 45 இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு, பில் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி வரி வசூல் மையங்களிலும் வங்கி கார்டு உரசி, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை செலுத்தலாம். சுங்கம் வரி வசூல் மையத்தில் 'கிஷோக்' இயந்திரம் செயல்பாட்டில் இருக்கிறது. இதேபோல், மேலும் ஐந்து இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.