தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வந்து விட்டது வாசனையற்ற பெயின்ட்!

வந்து விட்டது வாசனையற்ற பெயின்ட்!

வந்து விட்டது வாசனையற்ற பெயின்ட்!


ADDED : ஜூலை 10, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* 800 சதுர அடியில் தனி வீடு(ஜி+ 2) கட்ட உள்ளேன். இந்த மனையைச் சுற்றிலும் மூன்று பக்கமும் மூன்று பழைய வீடுகள் உள்ளன. நெருக்கடியான இப்பகுதியில் இடத்தை வீணடிக்காமல் ஒட்டி கட்ட வேண்டும். பக்கத்து கட்டடங்கள் பழுதாகாமல் அஸ்திவாரம் அமைப்பது எப்படி?

–தீனா:

எங்கெங்கே அடித்தளங்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் பக்கவாட்டு சுவரை முட்டுக்கொடுத்து, மண் சரிவதை தடுத்து விட்டு, கீழே உங்கள் நிலத்தின் ஓரத்தில் ஒரு பக்கம் சாய்ந்து பரவல் அடித்தளத்தை போட்டு மேலே கொண்டு வருவது ஒன்று.

இரண்டாவது முறையில், எங்கெங்கே துாண் அடித்தளங்கள் வருகின்றனவோ, அவ்விடங்களில் 1–1.20 மீட்டர் துார இடைவெளி (உங்கள் அடி மனை விளிம்பிலிருந்து) உள்ளே விட்டு தூண் பரவல் அடித்தளத்தை போடுங்கள்.

துாணிலிருந்து 1–1.20 மீ., துாரமுடைய கொடுங்கை விட்டத்தை, அடிமனை விளிம்பு வரை எல்லா கொடுங்கை விட்டங்களையும் தாங்கு விட்டம் போட்டு இணைத்து, அதன் மீது ஓரச் சுவரை மட்டத்திற்கு மேலே கட்ட வேண்டும்.

இம்முறையில் ஒவ்வொரு தளத்திலும் பீம் கட்ட வேண்டி இருக்கும். இரண்டாவது முறையில் கனமான பில்லர்கள் உள்ள பாலங்கள் அமைக்கலாம். வெளிநாடுகளில் ஸ்டீல் கயிறுகளால் வடிவமைக்கப்பட்ட பாலங்கள் (சஸ்பென்ஷன்) உள்ளன.

* அடிப்பகுதியில் பில்லர்கள் இல்லாமல் 200 மீ., நீளத்திற்கு எப்படி பாலங்கள் கயிறு மூலம் நிறுத்தப்படுகின்றன? இதன் தொழிற்நுட்பம் எப்படி செயல்படுகிறது? பாலத்தின் எடை எதன் மீது உட்காருகிறது?

–பழனிசாமி: தாங்கள் குறிப்பிடும் தொங்கு பாலங்கள் நிறையவே உள்ளன. இவற்றில் ‘கான்கிரீட் சஸ்பென்சன் பிரிட்ஜ்’ வகை, ‘எப்ஞ்ச்’ சங்கிலிகளால் குழாய்கள் வடிவில் தொங்கவிடப்பட்டு தாங்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் எஃகு தொங்கு பாலங்கள் அதிகமாக உள்ளன. எஃகு கயிறுகள் பலவற்றை ஒன்று சேர்த்து  குழாயினுள் நுழைத்து அதன் நீள்விசையால் தாங்கப்பட்டு அமைக்கப்படுகின்றன.

* ஒரு தொழிற்சாலையின் குடோனுக்கு 9000 சதுரடியில் தரை தளம் அமைக்க உள்ளேன். அது எலக்டிரிகல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி. அதை வழக்கமான கான்கிரீட் தரையாக அல்லாமல் ‘ஸ்டீல் பைபர் கான்கிரீட்’ கலந்து அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறான் என் நண்பன்; அதிகம் செலவாகுமா?

–சுகன்யா தேவி: எஃகு கலந்த கான்கிரீட்  என்பது கான்கிரீட்டில் 100 முதல் 150 ஒரு கனமீட்டர் அளவு கலந்து தரையினை தயார் செய்வார்கள். இவை பெரிய அளவிலான தொழிற்சாலை தரைக்காகவே பரிந்துரைக்கிறார்கள். இதன் அமைப்பு சாதாரண கான்கிரீட் செலவு தளத்தைவிடக் கூடுதலானது. இதற்கு பதிலாக சின்தடிக் பைபர்ஸ் மோனோபில்மென்ட் பாலியஸ்டர் அண்ட் நைலான் கலந்தும், தொழிற்சாலை தரை அமைக்கலாம். விலை குறைவு.

* வீடுகளுக்கு பெயின்ட்  அடித்தால் அந்த வாசனை போவதற்கு ஒரு வாரம் ஆகிறது. பெயின்ட் வாடையே வராத பெயின்ட் சந்தையில் உள்ளதா?

–ராஜேஷ்: வெளிச்சந்தையில் ‘பெயின்ட் ஏக்டிவேட்டெட் கார்பன் தொழில்நுட்பம்’ கிடைக்கிறது. அதை பொறியாளர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

* தண்ணீர் இல்லாமல் வேதியல் கட்டடப் பொருட்கள் கொண்டு கட்டப்படும் ஒரு தொழிற்நுட்பம் பற்றி பொறியாளர் கூறுகின்றார். உண்மையில் நீரின்றி கட்டடம் கட்டுதல் சாத்தியமா?

–முத்துராஜ்: ‘கிரீன் பில்டிங் புராடக்ட்ஸ்’ என்ற அம்சத்தில் இது கட்டப்படுகிறது. இத்தொழில்நுட்ப கட்டுமான வேலையில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மேலும், முன் ஆயத்த கட்டுமான வேதியியல் பொருட்களை தயாரிக்க ‘பில்டிங் பாஸ்ட் பிளஸ் ஈகோ ரெண்டர் பிளஸ் அண்ட் கிரீன் சீல்’ தேவை; அதாவது மறைநீர் எனப்படும் ‘விர்ச்சுவல் வாட்டர்’ நிறைய தேவை. அதைவிட இதன் கட்டுமான செலவு 150–300 சதவீதம் வரை கூடுதல். இத்தொழில்நுட்பம் பற்றி அறிந்து பயன்படுத்துவது நல்லது.

–மாரிமுத்துராஜ், உறுப்பினர்,

கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம்(கொசினா).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us