தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்.டி.ஓ., அலுவலத்தில் உதவி மையம் திறப்பு

ஆர்.டி.ஓ., அலுவலத்தில் உதவி மையம் திறப்பு

ஆர்.டி.ஓ., அலுவலத்தில் உதவி மையம் திறப்பு


ADDED : செப் 21, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில், பொதுமக்கள் வசதிக்கா உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கூறியதாவது:-

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், ஆன்லைன் சேவைகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும், இடைத்தரகர்களின்றி நேரடியாகச் சான்றிதழ்களைப் பெறவும் இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து உதவி மையம் வாயிலாக விளக்கம் அளிக்கப்படுகிறது. 

டிஜிட்டல் நடைமுறைகள் குறித்த எளிய வழிமுறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுவரொட்டிகளாக இந்த உதவி மையத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய டிஜிட்டல் மற்றும் உதவி மைய நடைமுறைகள் மூலம் பொதுமக்கள் இனி தேவையின்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us