/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசியக் கொடிகளை வாங்க அதிகாரி வேண்டுகோள்
/
தேசியக் கொடிகளை வாங்க அதிகாரி வேண்டுகோள்
ADDED : ஆக 13, 2024 01:23 AM

மேட்டுப்பாளையம்;சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடும் வகையில், மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அமைப்பினர், தேசியக் கொடியை வாங்கி பயனடையும் படி, அஞ்சல் துறை அலுவலர் நாகஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தை கொண்டாட, ஒவ்வொரு வீடுகளிலும், தேசியக் கொடியை ஏற்றும்படி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.
அஞ்சல் துறை அலுவலர் நாகஜோதி விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது:
மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் துறை அலுவலகத்திற்கு முதலில், 100 தேசியக் கொடிகள் வந்தன. அதை இரண்டு சமூக அமைப்பினர், பள்ளிகளுக்கு வாங்கிச் சென்றனர். தற்போது, 500 தேசியக் கொடிகள் வந்துள்ளன. 67 சென்டிமீட்டர் நீளமும், 54 சென்டிமீட்டர் உயரம் உடைய, ஒரு தேசியக்கொடி, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் தேசிய கொடிகளை வாங்கி பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வாய்ப்பை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அஞ்சலக அதிகாரி கூறினார். இந்த நிகழ்வில் தபால் அலுவலர்கள் தவநாதன், சரவணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

