/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானநிலைய விரிவாக்கம் செயல்படுத்த அதிகாரிகள் நியமனம்
/
விமானநிலைய விரிவாக்கம் செயல்படுத்த அதிகாரிகள் நியமனம்
விமானநிலைய விரிவாக்கம் செயல்படுத்த அதிகாரிகள் நியமனம்
விமானநிலைய விரிவாக்கம் செயல்படுத்த அதிகாரிகள் நியமனம்
ADDED : மார் 05, 2025 03:22 AM
கோவை:கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலம், வருவாய்த்துறை மூலமாக கையகப்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
இதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் தனி டீம் செயல்படுகிறது. இதில், டி.ஆர்.ஓ., பணியிடம் காலியாக இருக்கிறது. 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, ஐகோர்ட்டில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதையடுத்து, மதுரையில் கலெக்டரின் தனி துணை (நிலம்) உதவியாளராக பணிபுரிந்த வித்யாவுக்கு டி.ஆர்.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் மற்றும் 'டிட்கோ'வுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பிரிவுக்கு, நேற்று நியமிக்கப்பட்டார். இதேபோல், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, ரேஸ்கோர்ஸ் தாலுகா அலுவலக வளாகத்தில், தனிப்பிரிவு செயல்படுகிறது.
இப்பிரிவு டி.ஆர்.ஓ.,வாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) பணிபுரிந்த செந்தில்வடிவுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு இருக்கிறார்.