/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 26, 2024 11:07 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தொகுதியில், ஆண்கள், 7,66,077, பெண்கள், 8,15,428 மற்றும் மூன்றாம் பாலினத்தவர், 290 பேர், என மொத்தம், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர்.
நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என, மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ஓட்டு எண்ணும் மையமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, தாசில்தார் ஜெயசித்ரா, தபால் ஓட்டு அலுவலர் சசிரேகா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வரும், 19ம் தேதி ஓட்டுப்பதிவுக்கு பின், ஓட்டுச்சாவடிகளில் இருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்தில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.
கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும் போது, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது,' என்றனர்.

