ADDED : ஜூலை 03, 2026 03:00 PM
அன்னுார்: அன்னுாரில், 30-க்கும் மேற்பட்ட கடைகளில், பேரூராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருத்தல், விற்பனை, கடத்தல் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அன்னுார் பேரூராட்சியில், சுகாதார அலுவலர் ராஜ்குமார் தலைமையில், அலுவலர்கள், கடந்த இரண்டு நாட்களாக, பெட்டிக்கடை, மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்தனர்.
கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், ‘புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கல்விக்கூடங்களுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்றால் சிறைக்கு செல்ல நேரிடும்,’ என்றனர்.
அன்னுார் மெயின் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு,் கோவை ரோட்டில் சோதனை நடத்தினர்.
