/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் விழுந்த முதியவர் 3 நாட்களுக்கு பின் மீட்பு
/
கிணற்றில் விழுந்த முதியவர் 3 நாட்களுக்கு பின் மீட்பு
கிணற்றில் விழுந்த முதியவர் 3 நாட்களுக்கு பின் மீட்பு
கிணற்றில் விழுந்த முதியவர் 3 நாட்களுக்கு பின் மீட்பு
ADDED : மே 27, 2024 01:52 AM
கள்ளிப்பாளையம், : கோவை மாவட்டம், கள்ளிப்பாளையம், பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கொண்டான், 95. இவர் தன் மகன் பெருமாள் என்பவருடன் வசிக்கிறார். கடந்த 22ம் தேதி, காலைக்கடன் கழிக்க வெளியே சென்ற கொண்டான் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கொண்டான் கிடைக்காததால், தந்தையை காணவில்லை என, பெருமாள் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பெருமாள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத, சுமார் 30 அடி ஆழ கிணற்றின் உள்ளே இருந்து, ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது.
உள்ளே எட்டி பார்த்தபோது, கிணற்றின் உள்ளே கொண்டான் தத்தளித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலில், தொண்டாமுத்துார் தீயணைப்பு வீரர்கள், 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி, கொண்டானை மீட்டனர். கிணற்றில் விழுந்து மூன்று நாட்களுக்கு-ப் பின், 95 வயது முதியவரை, உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

