/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காட்டில் வெயில் தாக்கத்தால் மூதாட்டி பலி
/
பாலக்காட்டில் வெயில் தாக்கத்தால் மூதாட்டி பலி
ADDED : ஏப் 29, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;பாலக்காடு அருகே வெயில் தாக்கம் காரணம் மூதாட்டி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி பகுதியைச்சேர்ந்தவர் லட்சுமி 90. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கால்வாய் பகுதியில், சோர்வடைந்து தரையில் விழுந்து கிடந்ததை ஊர் மக்கள் பார்த்தனர்.
உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்ததாக தெரிவித்தனர்.
ஆனால், லட்சுமியின் உடலில் தீக்காயம் கண்டு சந்தேகமடைந்த டாக்டர்கள், நடத்திய விரிவான பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனையில், பலியானது வெயில் தாக்கத்தால் என உறுதி செய்தனர்.

