/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி
/
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி
ADDED : பிப் 27, 2025 12:50 AM

கோவை: கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை பராமரிக்க, மாநகராட்சியில் இருந்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவை - சத்தி ரோட்டில் செயல்படும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட், 3.68 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அங்குள்ள வணிக வளாகத்துக்கு புது வர்ணம் பூசப்பட்டுள்ளது. கழிப்பறை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டிருக்கிறது. தார் ரோடு போடப்பட்டு, பஸ்கள் நிற்பதற்கு 'ரேக்' வரையப்பட்டு, மேற்கூரை போடப்பட்டுள்ளது. இவ்வளாகத்தை பராமரிக்க, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஏல முறையில் மாநகராட்சி வழங்குவது வழக்கம்.
இன்னும் ஏலம் கோரப்படாததால், மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு ஆம்னி பஸ்சுக்கு நுழைவு கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், 150 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
வெளியூர் செல்ல வரும் பயணிகளின் டூவீலர்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு வசதி செய்து தரப்படவில்லை. அதனால், மாற்று வாகனங்களில் வர வேண்டியிருக்கிறது.
இதற்கு தீர்வு காண, சத்தி ரோட்டில், மேம்பாலத்துக்கு கீழ் மையத்தடுப்பு பகுதியை இடித்து, இட வசதி ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரிடம் இது குறித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆடு, மாடு அறுவைமனை செயல்படுகிறது. இதை நகரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்து விட்டு, அவ்விடத்தில் வாகனம் நிறுத்துமிடம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது.