/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 13, 2024 11:42 PM

கோவை, : வயநாடு மலைச்சரிவு சம்பவம் காரணமாக, அரசூரில் உள்ள கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், எளிமையான முறையில் ஓணம் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கேரள பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர்.
கல்லுாரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு, திருவாதிரைக்களி நடனமாடி, பாடல்கள் பாடி கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை பரிமாறினர்.
கொண்டாட்டத்தில் பங்கேற்ற கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி, ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து பேசி, அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஓணம் கொண்டாட்டத்தையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் சரவணன் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.