ADDED : செப் 02, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அரசம்பாளையத்தைச்சேர்ந்தவர் ராஜூ, 64, கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவை சிட்கோ பகுதியில் வேலை முடித்து பஸ்சில் வந்துள்ளார்.
அப்போது அரசம்பாளையம் பிரிவில் இருந்து, வீட்டிற்கு செல்ல ரோட்டை கடக்கும் போது, பழநியைச்சேர்ந்த விக்னேஷ், 23 என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து நடந்தது. இதில், படுகாயம் அடைந்த ராஜூவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.