தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘டாஸ்மாக்’ பார்கள் மூடப்பட்டதால் திறந்த வெளியில் மது குடிக்கும் அவலம்

‘டாஸ்மாக்’ பார்கள் மூடப்பட்டதால் திறந்த வெளியில் மது குடிக்கும் அவலம்

‘டாஸ்மாக்’ பார்கள் மூடப்பட்டதால் திறந்த வெளியில் மது குடிக்கும் அவலம்


ADDED : ஜூலை 03, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ பார்களுக்கான உரிமம் காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிந்ததால் அனைத்தையும் மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கில் 108, கோவை தெற்கில் 107 என, மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இதில், வடக்கில் 96, தெற்கில் 90 என, 186 பார்கள் மூட உத்தரவிடப்பட்டது. பார்கள் மூடப்பட்டுள்ளதால் ‘குடி’மகன்கள் பலர் காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும் எப்.எல்., 2 பார்களை தேடி செல்கின்றனர். பலர் மதுபாட்டில்களை வெளியே வாங்கி வந்து ரோட்டோரம் நின்றபடி குடிக்கின்றனர்.

காலி பாட்டில், டம்ளர்களை அந்தந்த இடத்திலேயே வீசி செல்கின்றனர். பொது இடங்களை பார் ஆக மாற்றி விட்டதால், கடந்து செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us