/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் திறந்தவெளியில் குப்பை தேக்கம்; மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
/
கிராமங்களில் திறந்தவெளியில் குப்பை தேக்கம்; மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
கிராமங்களில் திறந்தவெளியில் குப்பை தேக்கம்; மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
கிராமங்களில் திறந்தவெளியில் குப்பை தேக்கம்; மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
ADDED : மே 24, 2024 10:54 PM
பொள்ளாச்சி : குறிப்பிட்ட சில ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, குப்பைக்கிடங்கு ஏற்படுத்தி, இயற்கை உரம் தயாரிக்க ஒன்றிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில், உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தமட்டில், நகராட்சி மற்றும் சில பேரூராட்சிகளில், குப்பையை தரம் பிரிக்க கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரிக்கப்படும் மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. இதனால், திறந்தவெளியில் குப்பைகள் தேக்கம் அடைவது தடுக்கப்படுகிறது.
அதேநேரம், ஊராட்சிகளை பொறுத்தமட்டில் குப்பைக்கிடங்கு கிடையாது. இங்கு, குறைந்த எண்ணிக்கையிலான துாய்மைப்பணியாளர்களே உள்ளதால், குப்பையை சேகரிப்பது, தரம் பிரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்கும், மக்காத குப்பைகள் என, தரம் பிரிப்பதற்கான பழைய கட்டமைப்புகளே இன்றும் காணப்படுகிறது.
சில ஊராட்சிகளில், அவை முறையாக பின்பற்றப்படுவதும் கிடையாது. இதனால், கிராமங்களில், சாலையொட்டிய பகுதிகளில், குப்பை மற்றும் கழிவுகள் தேக்கம் அடைந்து காணப்படுகிறது.
பாலக்காடு ரோடு முத்துார், உடுமலை ரோடு என்.பி.டி., கல்லுாரி அருகே, நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, அருகருகே உள்ள சில குறிப்பிட்ட ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, குப்பை கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும். அங்கு இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரப்பகுதிகளுக்கு இணையாக, கிராமங்களிலும் குப்பைகள் சேகரமாகிறது. பல ஊராட்சிகளில், குப்பை கொட்ட போதிய இட வசதி கிடையாது. போதிய பணியாளர்கள் மற்றும் கட்டமைப்பு வசதி இல்லாததால், ரோட்டோரத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது,' என்றனர்.

