/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.54 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
/
ரூ.54 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
ADDED : மார் 13, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி கிழக்கு மண்டலம், 5வது வார்டுக்கு உட்பட்ட வழியாம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வகுப்பறைகளை மேயர் ரங்கநாயகி நேற்று திறந்துவைத்தார்.
அங்குள்ள சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு, வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, 51வது வார்டு சவுரிபாளையத்தில் உள்ள நுாலகத்தில், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டட பணிகளை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளை மேயர் அறிவுறுத்தினார்.