/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தாகம் போக்க நீர் மோர் பந்தல் திறப்பு
/
மக்கள் தாகம் போக்க நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 01, 2024 10:59 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், கோடை வெப்பத்தை சமாளிக்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கிணத்துக்கடவு மற்றும் கிராமப்புறங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில், அ.தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று, கொண்டம்பட்டி அரசு பள்ளி அருகே பொதுமக்கள் சார்பில், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. வாகனங்களை நிறுத்தி, நீர்மோரை பருகி சற்று இளைப்பாறி மக்கள் சென்றனர்.

