/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று புதிய அங்காடி திறப்பு
/
பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று புதிய அங்காடி திறப்பு
பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று புதிய அங்காடி திறப்பு
பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று புதிய அங்காடி திறப்பு
ADDED : செப் 06, 2024 02:38 AM

வால்பாறை;வால்பாறையில், பழங்குடியின மக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்ய அங்காடி திறக்கப்பட்டது.
வால்பாறையில், காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, கீழ்பூனாஞ்சி, கவர்க்கல், வில்லோனி நெடுங்குன்று, சங்கரன்குடி, கல்லார்குடி, பரமன்கடவு, பாலகணாறு, சின்கோனா உள்ளிட்ட, 12 செட்டில்மென்ட்கள் உள்ளன.
இவர்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில், ஏலம், மிளகு, ஜாதிக்காய், தேன், இஞ்சி உள்ளிட்ட விவசாயம் செய்துள்ளனர்.மேலும் வனப்பகுதியில் வீணாகும் செடி, கொடிகளை சேகரித்து, கைவினை பொருட்களும் தயாரிக்கின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாய இடத்தில், பயிர் செய்யும் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில், வால்பாறையில் தனி அங்காடி வழங்க வேண்டும் என கல்லார் குடி பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சிக்கு சொந்தமான கட்டத்தில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்த பொருட்கள் விற்பனை செய்ய அங்காடி திறக்கப்பட்டது.
கல்லார் பழங்குடியின மக்கள் கூறுகையில், 'எங்களின் வாழ்வாதாரமும் உயரும் வகையில், வால்பாறை நகரில் மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக, அங்காடி ஒதுக்கி தந்த அரசு துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பழங்குடியின மக்கள் விவசாயம் செய்யும் அனைத்து பொருட்களும், கைவினை பொருட்களும் அங்காடியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்,' என்றனர்.