/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில மோசடி புகாரில் வழக்கு பதிய உத்தரவு
/
நில மோசடி புகாரில் வழக்கு பதிய உத்தரவு
ADDED : ஆக 06, 2024 11:14 PM
கோவை : ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான நிலத்தை, மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, உப்பிலிபாளையம், ஜோதி நகரை சேர்ந்தவர் தாமோதரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான, இவருக்கு சொந்தமான நிலத்தை, கஞ்சிகோணம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவர், போலி வாரிசு சான்று மற்றும் ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கூறி, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். விசாரித்த மாஜிஸ்திரேட், புகார் குறித்து வழக்கு பதிவு செய்ய, துடியலுார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், சண்முகம் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.