/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : மே 17, 2024 01:02 AM
கோவை;மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை தாமதமின்றி முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கணபதி, காந்தி நகர், கட்டபொம்மன் வீதி ஆகிய பகுதிகளில் நடந்துவரும், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, 25வது வார்டில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில், 19.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
லங்கா கார்னர் பகுதியில் ரோட்டின் குறுக்கே வடிகால் அமைக்கும் பணிகளையும், கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாதை அடியே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளையும் வேகமாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

